ஐ.தே.கவின் பிரதித் தவிசாளராக நவீன் திஸாநாயக்க நியமனம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தவிசாளராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்குரிய நியமனக் கடிதம் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் நவீன் திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை வகித்த நவீன் திஸாநாயக்க, பின்னர் அந்தப் பதவியை இராஜிநாமா செய்திருந்தார்.

இந்நிலையிலேயே அவருக்குக் கட்சியில் தற்போது புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

காமினி திஸாநாயக்கவின் மகனே நவீன் திஸநாயக்க என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.