அவசரகாலச் சட்டம் மேலும் 2 மாதங்கள் அமுல்?

இலங்கையில் அவசரகாலச் சட்டம் குறைந்தது இன்னும் 2 மாதங்களுக்காவது அமுல்படுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

அத்துடன் டித்வா சூறாவளியால் இடம்பெயர்ந்த சிலரை அரசு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியிருப்பதால் இது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்குத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒப்புதல் அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.