ஒரு வார்த்தைக்காகப் பதவி விலக கோருவது நெறிமுறையற்ற செயல் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டு.

ஒரு பாடத்தொகுதியில் உள்ள ஒரு வார்த்தையில் உள்ள குறைபாட்டுக்காக, கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவை, பதவி விலக நிர்ப்பந்திப்பது நெறிமுறையற்றது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“கல்விச் சீர்திருத்தங்களில் குறைபாடுகள் இருந்தாலோ அல்லது முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் நாட்டுக்கும் மாணவர்களுக்கும் எதிரானதாக இருந்தாலோ, சம்பந்தப் பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும்.

பாடத் தொகுதியில் உள்ள ஒரு வார்த்தையின் அடிப்படையில், பதவி விலகுமாறு கோருவது நியாயமற்றது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.