யாழில் ரயில் விபத்தில் இளைஞர் ஒருவர் காயம்.
யாழ்ப்பாணம் – அரியாலை 13ஆம் கட்டைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற ரயில் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த அரியாலையைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
விபத்து தொடர்பாக யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பாதுகாப்பற்ற ரயில் கடவையால் கடந்த காலங்களில் உயிரிழப்புச் சம்பவங்கள் பதிவானதாகவும், உரிய பாதுகாப்பு கடவை அமைக்கக் கோரி மக்கள் பல தடவைகள் போராட்டம் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
