அரியாலை ரயில் விபத்தில் காயமடைந்த இளைஞர் பலி.
யாழ்ப்பாணம் – அரியாலை 13ஆம் கட்டைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் இன்று உயிரிழந்துள்ளார்.
முத்தமிழ் வீதி, கொட்டடி பகுதியைச் சேர்ந்த சிவராஜா சிவலக்சன் (வயது 23) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்தப் பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவை காணப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
