விஜித ஹேரத்தை சந்தித்த வாங் யீ.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை இன்று காலை சந்தித்துள்ளார்.

இதன்போது, விஜித ஹேரத் மற்றும் வாங் யீ இடையிலான இருதரப்பு பேச்சு நடைபெற்றுள்ளது.

டித்வா சூறாவளிக்குப் பின்னர் நாட்டின் மறுகட்டமைப்பு குறித்து மறுஆய்வு செய்வதும், சீன அரசால் வழங்கப்படும் உதவிகள் குறித்து அறிவிப்பதும் சீன வெளியுறவு அமைச்சரின் பயணத்தின் நோக்கமாகும்.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இன்று காலை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

அவருடன் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சைச் சேர்ந்த 17 சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் வருகை தந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.