நாகர்கோவிலில் பெண் கைது! பொதுமக்கள் சிலர் முறுகல்!!
யாழ். வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் ஒரு பெண்ணைக் கைது செய்வதற்குச் சென்ற பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினருடன் பொதுமக்கள் சிலர் முறுகலில் ஈடுபட்டனர்.
நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் ஒருவரைக் கைது செய்வதற்காக மருதங்கேணி பொலிஸார் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து, நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள அந்தப் பெண்ணின் வீட்டை திடீர் சுற்றிவளைப்பு செய்தனர்.
அப்போது, அந்தப் பெண்ணைக் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்ற பொலிஸார், குறித்த வீட்டின் வளாகத்தை மோப்ப நாய் கொண்டு பலத்த சோதனை செய்தனர்.
இந்தச் சோதனையின் போது, “பொலிஸார் அத்துமீறி எங்கள் வீட்டைச் சோதனையிடுகின்றனர்” என்று கூறி, பொதுமக்கள் சிலர் முறுகலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் அந்தப் பகுதியில் மேலும் சோதனைகள் மேற்கொண்டனர்.
இன்று அதிகாலை, அதே பகுதியில் 9 கஞ்சா பொதிகளை விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டாலும், யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






