வடமராட்சியில் தமிழரசின் தைப்பொங்கல் விழா.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தைப்பொங்கல் விழா இன்று வடமராட்சியில் நடைபெற்றது.
முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் காலை 9:30 மணியளவில் கட்சியின் வடமராட்சி – மடத்தடி அலுவலகத்தில் தைப்பொங்கல் விழா இடம்பெற்றது.
இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர், ஜனாதிபதி சட்டதரணி எம்.ஏ. சுமந்திரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
கட்சியின் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் சுரேந்திரன், உப தவிசாளர் தயாபரன், பருத்தித்துறை பிரதேச சபை, பருத்தித்துறை நகர சபை, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
