பொல்லால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் படுகொலை.

பொல்லால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூர சம்பவம் கண்டி, நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொன்தென்னாவ பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவருக்கும் 34 வயதுடைய சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.