இராணுவ ட்ரக்குடன் மோ. சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் மரணம்!
கொக்காவில் பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ ட்ரக்குடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், கொக்காவில் பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ ட்ரக்குடன் நேற்று பிற்பகல் மோதியது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இவ்வாறு இறந்தவர் வவுனியாவைச் சேர்ந்த 64 வயதுடையவர் என்றும், விபத்தில் சிக்கிய இராணுவ ட்ரக் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
