கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை – சுகாதா அமைச்சு

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சுகாதா அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் ஜயருவான் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக சிலோன் தவுஹித் ஜமாத் அமைப்பு அறிவித்துள்ளது.

அதேபோல் இதற்கு அனுமதி வழங்கிய ஜனாதிபதி, நீதியமைச்சர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சிலோன் தவுஹித் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராசீக்கின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே டொக்டர் ஜயருவான் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.