சு.க. மீளெழுச்சிப் பயணத்தில் கடும் முடிவுகள் எடுக்கப்படும்.

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பும் பயணத்தின்போது கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும்.” – என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“தேசிய அமைப்பாளர் பதவி என்பது சவாலான விடயமாகும். இந்தப் பதவியை வகித்துக்கொண்டு முன்னோக்கிச் செல்கையில் கட்சிக்காக வேலை செய்யக்கூடியவர்களுடன்தான் இணைந்து செல்ல முடியும்.

புகழுக்காக பதவிகளை வைத்திருப்பவர்களுடன் பயணிக்க முடியாது. எனவே, கடுமையான சில முடிவுகளை எடுக்க நேரிடும்.

அவ்வாறு முடிவுகளை எடுக்கும்போது தவறாக நினைக்க வேண்டாம் எனக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் கனவுடன் எவரும் செயற்பட முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுமாறு கட்சியை விட்டுச் சென்றவர்களையும் அழைக்கின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.