மீண்டெழுந்த மொட்டுக் கட்சி! உயருகின்றது மக்கள் ஆதரவு!! – இப்படிக் கூறுகின்றார் நாமல்.
“நாம் மீண்டெழுந்து முன்னோக்கிச் செல்கின்றோம். மக்கள் ஆதரவு அதிகரித்து வருகின்றது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“நாட்டு மக்கள் வழங்கும் செய்தி என்னவென்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அவ்வாறு புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. இதற்கான பதில் அடுத்த தேர்தலில் கிடைக்கப்பெறும்.
சிறைச்சாலைகளைக் காண்பித்து, எமது அரசியல் பயணத்தைத் தடுக்க முடியாது. அரசின் அரசியல் நிகழ்ச்சி நிரல் மூலம் எம்மை ஒடுக்க முடியாது. நாம் மீண்டெழுந்து முன்னோக்கிச் செல்கின்றோம். மக்கள் ஆதரவு அதிகரித்து வருகின்றது.” – என்றார்.
