கோர விபத்தில் ஓட்டோ சாரதி பலி! – இரண்டு பெண்கள் காயம்.
காரும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி இடம்பெற கோர விபத்தில் ஓட்டோ சாரதி உயிரிழந்துள்ளார். அத்துடன் ஓட்டோவில் பயணித்த பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அனுராதபுரம், தம்புத்தேகமை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
ஓட்டோவின் சாரதியான தம்புத்தேகமை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஓட்டோவில் பயணித்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியான 71 வயது வயோதிபரைக் கைது செய்துள்ள பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
