அநுர அரசுக்கு பொன்சேகா பாராட்டு மழை – ஆதரவு வழங்கவும் முடிவு.

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசில் உள்ள அமைச்சர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்லை. இதனைப் பாராட்ட வேண்டும்.”

இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையில் கடந்த காலங்களில் சட்டம், ஒழுங்கு இருக்கவில்லை. பணம் இருக்கும் இடத்தில்தான் நீதி இருந்தது. ஊழல், மோசடிகள் இடம்பெற்றன. குறுக்கு வழியில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதனால் பொதுமக்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்லை. இதற்குரிய பாராட்டை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும். அதனை நோக்கிய பயணத்தின்போது எமது ஆதரவு வழங்கப்படும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.