ஷிராந்தி ராஜபக்ஷ சட்டத்தை மதித்துச் செயற்பட வேண்டும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு.

“நாட்டின் சட்டத்தை மதித்துச் செயற்பட வேண்டிய சமூக பொறுப்பு ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு உள்ளது.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாவதற்கு ஷிரந்தி ராஜபக்ஷ இரு வாரங்கள் அவகாசம் கோரியுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் கூறியவை வருமாறு:-

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரே ஷிராந்தி ராஜபக்ஷ. அவர் இந்நாட்டில் முதல் பெண்மணியாக இருந்தவர். சிறார் பாடசாலையை வழிநடத்துபவர்.

எனவே, உரிய வகையில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது. அவர் சட்டத்தை மதித்துச் செயற்பட வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.