கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அனுராதபுரத்தில் இராஜாங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது கொலையா அல்லது உயிர்மாய்ப்பா என்பது தொடர்பில் இராஜாங்கனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
