யாழ். கரையோரப் பகுதிகளில் கடல்நீர் உட்புகுந்ததால் 85 குடும்பங்கள் பாதிப்பு

யாழ். கரையோரப் பகுதிகளில் கடல்நீர்
உட்புகுந்ததால் 85 குடும்பங்கள் பாதிப்பு

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரையை அண்டிய சில பகுதிகளின் வீடுகளுக்குள் கடல் நீர் இன்று செவ்வாய்க்கிழமை (10) உட்புகுந்ததால் 85 குடும்பங்கள்  பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் கொழும்புத்துறை ஜே 161 கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள எழிலூர், மகேந்திரபுரம் கிராமங்களில் சுமார் 50 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 3 குடும்பங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு  இடம்பெயர்ந்துள்ளனர்.

அத்தோடு ஜே 68 கிராம உத்தியோகத்தர் பிரிவில் தொடர்மாடி அருகாமை கிழக்கு பகுதியில் சுமார் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளை யாழ். மாட்ட அனர்தத்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ்.சூரியராஜா பார்வையிட்டார்.

யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன், யாழ்.மாநகர சபையின் பிரதி மேயர் து.ஈசன் மற்றும் யாழ். மாநகர சபை உறுப்பினர்களும் குறித்த பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.