கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் 7 வயது சிறுவன் பரிதாப மரணம்!
தொடர்மாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் உள்ள சீமெந்துக் கூரை இடிந்து வீழ்ந்ததில் 7 வயது சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சிறுவன் நேற்று புதன்கிழமை தனது பாட்டியுடன் தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் நின்று கொண்டிருந்தபோது, திடீரென தொடர்மாடி குடியிருப்பின் சீமெந்து கூரை இடிந்து சிறுவன் மீது வீழ்ந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
தொடர்மாடி குடியிருப்பின் சீமெந்துக் கூரை திடீரென இடிந்து வீழ்ந்ததற்கான காரணத்தைக் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
