இரும்புக்கம்பியால் தாக்கி கடை உரிமையாளர் கொடூரப் படுகொலை.

கடை ஒன்றின் உரிமையாளர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குருநாகல் மாவட்டம், யக்வில – தம்பாடிய பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

தளபாடங்கள் தயாரிக்கும் கடை ஒன்றின் உரிமையாளரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

42 வயதுடைய கடை உரிமையாளர் ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

இவரது மனைவி வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 40, 45 மற்றும் 46 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவர் முன்னாள் இராணுவச் சிப்பாய் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.