கோட்டாபயவுக்கு சி.ஐ.டி. அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 13ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷவை விசாரணைக்கு வருமாறு சி.ஐ.டியினர் அழைத்துள்ளனர் என்று தெரியவருகின்றது.

கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள ஒரு வீட்டுத் தொகுதிக்குச் சொந்தமான பல வீடுகளைப் பல நபர்களுக்கு சட்டவிரோதமாக ஒதுக்கியதை அங்கீகரிக்கும் கடிதங்கள் வெளியிடப்பட்டமை குறித்து வாக்குமூலம் பெறவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிக்குக் கடந்த வெள்ளிக்கிழமை எழுத்துபூர்வ அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.