தண்டவாளத்தைக் கடந்த போது விபரீதம்: ரயிலில் மோதி வயோதிபர் பரிதாபச் சாவு!

ரயிலில் மோதி வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

காலி, அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதம்பாகம பகுதியில் உள்ள ரயில் பாதையைக் கடந்தபோது ரயிலில் மோதி மேற்படி வயோதிபர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய வயோதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.