உறவினர்கள் முன் நேர்ந்த அவமானம்: கல்லூரி மாணவியின் உயிரைப் பறித்த சாக்லேட் பரிசு!

கொல்கத்தாவில் 20 வயதான மாணவிக்கு காதலன் கொடுத்த சாக்லேட்டால் காதலி தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம், இடம்பெற்றுள்ளது. கல்லூரி ஒன்றில் பயிலும் 20 வயது மாணவிக்கு அவளது கல்லூரி நண்பன் செய்த “விளையாட்டு” வினையாக முடிந்துள்ளது.

கடந்தவாரம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, பெண்ணின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவளுக்கு ஒரு சாக்லேட் பரிசாக கொடுத்த இளைஞன், இதை யாரும் இல்லாத இடத்தில் தனியாக சாப்பிடு கூறியிருந்தான்.

இந்நிலையில் உறவினர்கள் முன்னிலையில், பெண் சாக்லேட்டை பிரித்து எடுக்க முயன்றபோது, கவருக்குள் இருந்த சாக்லேட்டுடன் சேர்த்து ஒரு ஆணுறை பாக்கெட் கீழே விழுந்தது.

இதனால் உறவினர்கள் கடும் கோபத்திற்கு ஆளானதுடன், யுவதியிடம் அது தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர். பெண் கண்ணீருடன், “அவன் என் கல்லூரி நண்பன் மட்டுமே. காதல் எதுவும் இல்லை.

பிறந்தநாள் பரிசாக கொடுத்தான். எனக்கு இதெல்லாம் தெரியாது என கூறியபோதும் குடும்பத்தினர் அதை நம்பவில்லை . இதனால் மனமுடைந்த யுவதி த தன்னுயிரை மாய்த்துக்கொண்டாள்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் சாக்லேட்டை கொடுத்த நண்பன் கைது செய்யப்பட்டு முன்னெடுத்த விசாரணையில், அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அவள் மீது எனக்கு ஆசை இருந்தது.

அதை வெளிப்படுத்தும் விதமாக விளையாட்டுக்காக சாக்லேட்டுடன் ஆணுறையை வைத்து கொடுத்தேன். இப்படி பெரிய விபரீதம் நடக்கும் என்று நினைக்கவே இல்லை. யாரும் இல்லாத இடத்தில் சாப்பிடச் சொன்னேன். குடும்பத்தினர் முன்பு பிரிப்பாள் என்று தெரியாது என கூறியுள்ளார்.

இச்சம்பவம் சமூகத்தில் “விளையாட்டு” என்ற பெயரில் செய்யப்படும் செயல்களின் விளைவு யுவதியின் உயிரை பறித்து விட்டமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.