புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 15 வயது மாணவன் காலமானார்! – வவுனியாவில் சோகம்.

வவுனியாவில் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியா, நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த சுரேஸ் ஸர்ணவன் (வயது 15) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மேற்படி மாணவன், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

மாணவன் ஸர்ணவனின் மறைவு குறித்து அவர் கல்வி கற்ற பாடசாலைச் சமூகம் மற்றும் நெளுக்குளம் கிராம மக்கள் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.