மதவாச்சியில் பஸ் மோதி பெண்ணொருவர் மரணம்! – சாரதியும் உதவியாளரும் தப்பியோட்டம்.

யாழ்ப்பாணம் – ஏ – 9 பிரதான வீதியின் மதவாச்சி நகரில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று, பாதசாரியான பெண் மீது மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான அந்தப் பெண், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அவரது அடையாளம் மற்றும் விவரங்களைக் கண்டறியும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து நிகழ்ந்த உடனே, அந்த பஸ்ஸின் சாரதியும் அவரது உதவியாளரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

அவர்களைக் கைது செய்வதற்காக மதவாச்சி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.