கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘கமாண்டோ சலிந்த’ மார்ச் 12 வரை விளக்கமறியலில்!
பாதாள உலகக் குழுவின் முக்கிய செயற்பாட்டாளராகக் கருதப்படும் ‘கமாண்டோ சலிந்த’ என அழைக்கப்படும் சந்தேகநபரை எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரைப் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவராகக் கமாண்டோ சலிந்த பெயரிடப்பட்டுள்ளார்.
இவர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
