அலி கமேனி கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகம் அறிவிப்பு.

ஈரானிய அரசின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு ஈரான் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கிறது.

ஈரானிய அரசுத் தொலைக்காட்சி மற்றும் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளன.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (வயது 86) கொல்லப்பட்டதாக மார்ச் 1, 2026 அன்று அறிவிக்கப்பட்டது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து சனிக்கிழமை காலை தெஹ்ரானில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் குடியிருப்பு மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கமேனியின் மறைவை ஒட்டி ஈரான் அரசு 40 நாட்கள் தேசிய துக்கம் அறிவித்துள்ளது.மேலும், நாடு முழுவதும் 7 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரனும் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.