ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை முதன்முதலாகப் போர்க்களத்தில் பயன்படுத்திய ஈரான்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.
இது ஒலியை விட 10 முதல் 15 மடங்கு வேகத்தில் (Mach 10-15) பயணிக்கக்கூடியது.
சுமார் 1,400 முதல் 1,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது.
இதன் அதிகப்படியான வேகம் மற்றும் வளிமண்டலத்திற்குள் திசையை மாற்றும் திறன் (Maneuverability) காரணமாக, அமெரிக்காவின் THAAD, Patriot மற்றும் இஸ்ரேலின் Iron Dome, Arrow போன்ற மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளால் இதை இடைமறிப்பது மிகவும் கடினம்.
இது திட எரிபொருள் இயந்திரம் மற்றும் திரவ எரிபொருளால் இயங்கும் ‘ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனம்’ (Hypersonic Glide Vehicle) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
