சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் ‘வீர வனிதையர்’ விருது விழா.

46 ஆண்டுகால கலைப் பாரம்பரியத்தைக் கொண்ட புதிய அலை கலை வட்டம், அதன் மகளிர் அணியின் ஏற்பாட்டில் இரண்டாவது ஆண்டாக வழங்கும் ‘வீர வனிதையர்’ விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 7ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில், கொழும்பு – 11, செட்டியார் தெருவில் அமைந்துள்ள கல்யாண முருகன் மண்டபத்தில் இவ்விழா மிக விமர்சையாக நடைபெறவுள்ளது.

இவ் விழாவில் பிரதம அதிதியாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்துகொள்கின்றார்.

நிகழ்வுக்கு முன்னிலை வகிக்கின்றார் பிரபல தொழில் அதிபர் பி.எஸ்.செல்வரட்ணம்.

சிறப்பு அதிதியாக தமிழகம் புதுக்கோட்டை தமிழ் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தியும், கெளரவ அதிதிகளாக மேலும் பலரும் பங்கேற்கின்றனர்.

கடந்த ஆண்டு நடை பெற்ற மகளிர் தின விழாவில் வழங்கப்பட்டது போல் இவ்வாண்டும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணங்களும், துப்புரவுத் தொழிலாளருக்கு சாறி மற்றும் அத்தியாவசியப்பொருள்களும் வழங்கப்படவுள்ளன.

நிகழ்வின் பிரதான அம்சமாக கலை, இலக்கியம், ஊடகம்,சமூக மற்றும் ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டுவரும் பெண்கள் 20 பேருக்கு
வீர வனிதை விருதும் வழங்கிக் கெளரவிக்கப்படவுள்ளது.

பல்வேறு கலைக் கதம்ப நிகழ்ச்சிகளும். ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று மகளிர் அணி நிர்வாகம் அறிவிக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.