கர்நாடகாவில் பயங்கரம்: ஜீவனாம்சம் கேட்ட மனைவியை ஜீப் ஏற்றித் திட்டமிட்டுப் படுகொலை செய்த கணவன்!
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், ஒரு தம்பதியருக்கிடையில் நீண்ட நாட்களாக விவாகரத்து தொடர்பில் பிரச்சினை இருந்த நிலையில், ஒரு நாள் அந்தப் பெண் கார் விபத்தொன்றில் சிக்கி பலியானார்.
கார் விபத்தொன்றில் சிக்கி பலியான பெண்
பிப்ரவரி மாதம் 26ஆம் திகதி, லலிதா (Lalita Hattaragi) என்னும் பெண் கார் விபத்தொன்றில் சிக்கினார். ஜீப் ஒன்று அவர் மீது மோதிவிட்டுச் செல்ல, அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்தைக் கண்ணால் கண்ட பேருந்து ஒன்றின் சாரதி பொலிசாருக்கு தகவலளிக்க, அந்த பேருந்திலிருந்த கமெராவில் அந்த சம்பவம் பதிவாகியிருந்தது.
அந்த கமெராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்யும்போது, லலிதா மீது மோதிவிட்டுச் சென்ற ஜீப்பில் நம்பர் பிளேட் இல்லை என்பது தெரியவந்தது.
விபத்து என கருதி பொலிசார் லலிதா வழக்கை விசாரித்துவந்த நிலையில், லலிதாவின் தந்தை தன் மகள் கொல்லப்பட்டதாக புகாரளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், லலிதா மீது மோதிய ஜீப்பை ஏற்பாடு செய்தது அவரது கணவரான உதய் (Uday Hattaragi) என்பதும், தன் மனைவியைக் கொல்ல நாகப்பா என்பவருக்கு 40 லட்ச ரூபாய் கொடுக்க முன்வந்ததும் தெரியவந்தது.
அதாவது, லலிதாவுக்கும் உதய்க்கும் விவாகரத்து விடயத்தில் நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்துவந்துள்ளது. லலிதா தனக்கு ஜீவனாம்சமாக இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உட்பட பல விடயங்களைக் கேட்டுள்ளார்.
சரி, நீதிமன்றத்துக்கு வெளியே செட்டில் செய்துகொள்ளலாம் எனக் கூறி, லலிதாவை அழைத்துள்ளார் உதய்.
அதன்படி லலிதா உதயை சந்திக்க வர, வரும் வழியில் நாகராஜும் அவரது கூட்டாளிகளும் லலிதா மீது ஜீப்பை மோதிக் கொன்றுவிட்டுத் தப்பியுள்ளார்கள்.
உதயும், நாகப்பா மற்றும் அவரது கூட்டாளிகளில் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான நாகராஜின் மற்றொரு கூட்டாளியை பொலிசார் தேடிவருகின்றனர்.
இதற்கான சிறந்த தலைப்புகள்
