மகாராஷ்டிராவில் கொடூரம்: விளையாடிய 4 வயது பேரன் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய பாட்டி!
மகாராஷ்டிராவில் 4 வயது பேரன் மீது பாட்டி கொதிக்கும் நீரை ஊற்றிய அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள கோரடி பகுதியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவ தினத்தன்று நேற்று முன்தினம் மாலை சிறுவன் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தான்.
கையில் கொதிக்கும் நீருடன் சென்று கொண்டிருந்த பாட்டி மீது வண்ணப்பூச்சு அடிக்க முயன்றுள்ளான்.
இதில் கோபமடைந்த பாட்டி, கொதிக்கும் நீரை சிறுவன் மீது ஊற்றுகிறார், வலியால் சிறுவன் அலறித்துடிக்க பக்கத்தில் இருந்த சிறுமி வாளியில் வைத்திருந்த நீரை ஊற்றுகிறார், தொடர்ந்து பாட்டியும் ஊற்றுவது போல் முடிகிறது.
இக்காட்சிகள் சிசிடிவி கமெராவில் பதிவாக சமூகவலைத்தளங்களில் வெளியானது, பலரும் கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
உடனடியாக சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, 45 சதவிகிதம் தீக்காயங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
What a MONSTER B!TCH 😡
Goes Full Psycho; Pours boiling Hot Water on 5yr Old kid because he wanted to play Holi with her 🤬 pic.twitter.com/1LuFLcrwcW— Mihir Jha (@MihirkJha) March 4, 2026
