பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் விழிப்பூட்டல் பலகைகளை காட்சிப்படுத்தினர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கில் ஆசிய நிலையத்தின் அனுசரணையோடு GAFSO நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின் ஓர் அங்கமாக பிரதேச செயலகம், பொலிசார் மற்றும் GAFSO நிறுவனம் இணைந்து பாதையோர விழிப்பூட்டல் பலகைகளை அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் நேற்றுகாட்சிப்படுத்தினர்.

இதன் போது GAFSO நிறுவன திட்டப்பணிப்பாளர் எ.ஜே. காமில் இம்டாட், கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான்,நிர்வாக கிராம உத்தியோகத்தர் யூ.எல் பதியுத்தீன்,மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. எஸ்.எல்.சிபயா,சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஹஸ்பீயா முஜாஹீத், பொலிஸார் மற்றும் GAFSO கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1

Leave A Reply

Your email address will not be published.