கிழக்கு இப்தார் நிகழ்வு சம்மாந்துறையில்!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபையும் இணைந்து நடத்திய கிழக்கு மாகாணமட்ட இப்தார் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மாலை சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு தொகுதியில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் நந்தலால் ரத்ன சேகர கலந்து சிறப்பித்தார்.

மேலும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித் , சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ் எல் எம்.ஹனிபா, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.

இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.