ஜார்க்கண்டில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 4 சிறுவர்கள் பலி!.

ஜார்க்கண்டில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 4 சிறுவர்கள் பலியாகினர்.

ஜார்க்கண்ட் மாநிலம், சத்ரா மாவட்டத்தில் இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதியது. இந்த சம்பவத்தில் நான்கு சிறுவர்கள் பலியானதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

சிரையாதண்ட் பகுதியில் உள்ள பிபர்வர்-தண்ட்வா சாலையில் இந்த விபத்து நடந்ததாக அவர்கள் மேலும் கூறினர்.

பலியானவர்கள் பராதி கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் 14 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வியாழக்கிழமை இரவு விபத்து நடந்தபோது கார் பச்ராவிலிருந்து வந்து கொண்டிருந்தது” என்று பிபர்வார் காவல் நிலைய அதிகாரி அபய் குமார் கூறினார்.

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.