வீதியைக் கடக்க முயன்ற முதியவர் லொறி மோதி பரிதாப உயிரிழப்பு!

கொழும்பு, பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய பஸ் நிலைய வீதியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் 71 வயதுடைய வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதிய பஸ் நிலைய வீதியில் மேற்படி வயோதிபர் வீதியைக் கடக்க முயன்ற போதே, அவ்வழியே வந்த லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் மடபாத பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவர் எனப் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக லொறியின் சாரதி பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.