இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் கோட்டா ஆஜர் – இரண்டரை மணிநேரம் வாக்குமூலம்.
விசாரணை ஒன்றின் நிமித்தம் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை இலஞ்ச, ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய அங்கு வருகை தந்த அவர், சுமார் இரண்டரை மணிநேரத்துக்கும் மேலாக விசேட வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் குறிப்பிட்டதொரு ஊழல் விசாரணை தொடர்பாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவர் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
உயர்மட்ட அதிகாரிகள் முன்னிலையில் வழங்கப்பட்ட இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அங்கிருந்து வெளியேறினார்.
முன்னாள் ஜனாதிபதி ஒருவர் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் வழங்கியமை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசாரணை தொடர்பான மேலதிக விவரங்களை வெளியிட ஆணைக்குழு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
