55 லீற்றர் பெற்றோல் பதுக்கல்: கேகாலையில் ஒருவர் கைது!
னசட்டவிரோதமான முறையில் 55 லீற்றர் பெற்றோலைத் தனது வசம் வைத்திருந்த 39 வயதுடைய நபர் ஒருவர், நேற்று மாலை புலத்கொஹுபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கேகாலை, பொஸ்ஸல்ல – தம்பேல்கொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் கேகாலை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று புலத்கொஹுபிட்டிய பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
