அதிர்ஷ்டம் கதவைத் தட்டியது: குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ரூ.1 கோடி லொட்டரி டிக்கெட்: தேடிக் கண்டுபிடித்த சகோதரரால் வந்த ஜாக்பாட்!

குப்பை தொட்டியில் வீசப்பட்ட ரூ.1 கோடி லொட்டரி டிக்கெட் சகோதரரால் பரிசு கிடைத்துள்ளது.

கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள தலவாடி பஞ்சாயத்தைச் சேர்ந்த 72 வயதான குஞ்சச்சம்மா என்பவர், அம்பலப்புழா–திருவல்லா மாநில நெடுஞ்சாலையோரம் ஒரு சிறிய பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்னர், அருகே உள்ள ஜார்ஜ் குட்டி என்ற உள்ளூர் லொட்டரி விற்பனையாளரிடமிருந்து 2 லொட்டரிகளை வாங்கியுள்ளார்.

மறுநாள் அதில் ஒரு லொட்டரிக்கு ரூ.5,000 பரிசு விழுந்தது தெரிய வந்த நிலையில், மகிழ்ச்சியில் மற்றொரு லொட்டரி டிக்கெட்டை குப்பையில் வீசியுள்ளார்.

அதன் பின்னர், அவரது சகோதரர் தொலைபேசியில் அழைத்து நீ வாங்கிய லொட்டரி டிக்கெட்டிற்கு ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தான் அந்த லொட்டரி டிக்கெட்டை குப்பை தொட்டியில் வீசிய விவரத்தை அந்த மூதாட்டி தெரிவிக்க, உடனடியாக கிளம்பி கடைக்கு வந்த சகோதரர் அந்த குப்பை முழுவதும் தேடி ரூ.1 கோடி பரிசு வென்ற லொட்டரி டிக்கெட்டை கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது அந்த லொட்டரி டிக்கெட் பரிசை பெறுவதற்காக ஃபெடரல் வங்கியின் தலவாடி கிளையில் ஒப்படைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.