ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்.

ரஜினியின் பிறந்தநாள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் அவரை சந்திப்பதற்காக ரசிகர்கள் ரஜினியின் வீட்டிற்கு வருவது வழக்கம். ரஜினியும் வெளியில் வந்து ரசிகர்களை சந்திப்பது வழக்கம்.

அவ்வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு இன்று காலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். கேட்டுக்கு வெளியே நின்ற ரசிகர்கள் ரஜினியை வாழ்த்தி கோஷமிட்டனர். உடனே வெளியில் வந்த ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் அவரது மகள் சௌந்தர்யா மற்றும் மருமகன் விஷாகன் மற்றும் சௌந்தர்யாவின் மகன்( பேரன்) உடன் பட்டாசு வெடிக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.