மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி பரிதாப உயிரிழப்பு!

கொழும்பு, பாதுக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுலாவ – குருவல வீதியில் இடம்பெற்ற விபத்தில் 32 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

பாதுக்க, மதுலாவ சந்தியிலிருந்து லியன்வல சந்தி நோக்கி அதிவேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, குருவல பகுதியில் வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த பாதசாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் பாதசாரியும், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபரும் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தவர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக ஹோமாகம வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி பாதசாரி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் பாதுக்க பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்குத் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைப் பாதுக்க பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.