பஸ் மோதி பத்து வயது மாணவி பலி! – மட்டக்குளியில் சோகம்.

கொழும்பு, மட்டக்குளி பகுதியில் பஸ்ஸிலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற 10 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், அதே பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று மதியம் இடம்பெற்ற இந்தச் சோகமான விபத்தில் படுகாயமடைந்த சிறுமி, உடனடியாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிரிழந்த சிறுமி மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவியாவார். பாடசாலை முடிந்து வீடு திரும்பிய போதே அவர் விபத்தில் சிக்கியுள்ளார்.

பஸ்ஸிலிருந்து இறங்கிய அந்தச் சிறுமி, வீதியைக் கடக்க முற்பட்ட போதே அதே பஸ்ஸில் சிக்கி இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.