மின்சாரம் தாக்கி விவசாயி மரணம்! – மட்டக்களப்பில் துயரம்.
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, தாந்தாமலைப் பகுதியில் மின்சாரம் தாக்கி 58 வயதுடைய விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாந்தாமலை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் நேற்று தனது பயிர்ச்செய்கை நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக, மின் மோட்டாரை இணைக்க முற்பட்டுள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்த கொக்கட்டிச்சோலை பொலிஸார், சடலத்தை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
விவசாய நடவடிக்கையின் போது போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் இன்றி மின்சார உபகரணங்களைக் கையாண்டதே இந்த விபத்துக்குப் பிரதான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
