ரணிலின் வீட்டில் மனைவியிடம் சி.ஐ.டி.யினர் வாக்குமூலம் பதிவு.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவிடம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்தனர்.

கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அங்கு வைத்தே இந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.

எந்தவொரு விசாரணை நிமித்தம் அல்லது எந்தச் சம்பவம் தொடர்பில் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்பது குறித்த மேலதிக விவரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.