கோர விபத்தில் சிக்கி இளம் தாய் உயிரிழப்பு – குருநாகலில் பரிதாபச் சம்பவம்.

குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்கமுவை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த ஹயஸ் வாகனமும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற பெண்ணே பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கல்கமுவை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனவும், அவர் இரண்டு பிள்ளைகளின் தாய் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய ஹயஸ் ரக வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.