சங்குக் கூட்டணியின் மே தின நிகழ்வு இணுவிலில்!

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் (சங்குக் கூட்டின்) மே தினக் கூட்டம் நேற்று யாழ். இணுவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் ‘ஸ்ரீலங்கா அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்’ என்ற தலைப்பில் நடைபெற்றது.

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., சமத்துவக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளை ஒன்றிணைந்து இந்த மே தினக் கூட்டத்தை நடத்தின.

இதில் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினரான ப.கஜதீபன், ஜனநாயகப் போராளிகள் கட்சியைச் சேர்ந்த வேந்தன், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.