கோர விபத்தில் இருவர் பலி! – ஓட்டோ சாரதி தீவிர சிகிச்சைப் பிரிவில்.
Lஇரத்தினபு


ரி – பெல்மதுளை பகுதியில் இன்று
அதிகாலை லொறி – ஓட்டோ நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஓட்டோ சாரதி படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
ஹாலிஎல பகுதியிலிருந்து இரத்தினபுரி நோக்கிப் பயணித்த ஓட்டோ ஒன்று, எதிரே வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்ற இந்த விபத்தின் போது ஓட்டோ பலத்த சேதத்துக்குள்ளானது.
ஓட்டோவில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த ஓட்டோ சாரதி, தற்போது இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் பெல்மதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
