புங்குடுதீவில் கோர விபத்து! இளைஞர் பரிதாப மரணம்!!

யாழ்ப்பாணம், புங்குடுதீவு – மடத்துவெளிப் பகுதியில் நேற்று முற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தனியார் விடுதி ஒன்றுக்குச் சொந்தமான பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் புங்குடுதீவு, 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக தகவல்களைத் திரட்டி வரும் ஊர்காவற்றுறைப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.