காலியில் ஒருவர் சுட்டுக்கொலை!
காலி, தங்கேதர பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை வேளையில் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில், மேற்படி நபர் படுகாயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர் யார்? மற்றும் இந்தச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்த விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான மோதலா அல்லது தனிப்பட்ட பகையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தங்கேதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் காலிப் பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
