வட்டிப் பணத் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை! – காலியில் பயங்கரம்.

காலி, நாகொடை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான மோதலில், குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வட்டிக்குப் பணம் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக இரு குழுக்களுக்கிடையே நீண்டநேரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டபோது மேற்படி நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் 41 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளனர். அவர்களைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.