சீரற்ற காலநிலையால் இருவர் பரிதாபச் சாவு! – 3 ஆயிரத்து 600 பேர் பாதிப்பு

இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பெய்து வரும் கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் சிக்கி இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலையால் 1,151 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஒரு வீடு முழுமையாகவும், 112 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

அதிகாரப்பூர்வ தகவல்களின்படி அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களின் விபவரங்கள்:-

* கொழும்பு மாவட்டம்: 1,469 பேர் பாதிப்பு.
* புத்தளம் மாவட்டம்: 1,264 பேர் பாதிப்பு.
* களுத்துறை மாவட்டம்: 529 பேர் பாதிப்பு.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களிலும் பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரணப் பணிகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் முடுக்கிவிட்டுள்ளது.

மழை தொடரும் பட்சத்தில் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.